ரஷ்யாவுக்குள் எதிர்ப்பைத் தூண்டிவிடவும் அதிபர் விளாடிமிர் புடினை பதவியிலிருந்து ஒழித்துக் கட்டவும் திட்டம் தீட்டப்படுவ தாக மேற்கத்திய நாடுகள் மீது முன்னாள் சோவியத்தின் கடைசி அதிபரான கோர்ப்பாசேவ் குற்றம் சாட்டியுள்ளார்.
சோவியத் ஒன்றியம் உடைந்து 25 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில், பிபிசிக்கு கோர்ப்பாசேவ் பேட்டியில் மெற்கண்டவாறு அவர் குற்ற ஞ்சாட்டியுள்ளார்.
ரஷ்ய அதிபர் புடினை இழிவுபடுத்தவும், அவரை ஒதுக்கி வைத்து, பதவி விலகச் செவதற்கும் மேற்கத்திய நாடுகள் Aதிட்டம் போட்டுள்ளன. புடினை இழிவுபடுத்தும் செயல்களில் ஈடுபட் மேற்கத்திய ஊடகங்களுக்கு மறைமுக ஆனைகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தாம் நம்புவதாக கொர்ப்பா சேவ் தெரிவித்தார்.
கடந்த 1991ஆம் ஆண்டில் ரஷ்யாவில் இருந்து பிரிந்து சென்ற சோவியத் குடியரசுகளின் தலைவர்கள், பல தவறுகளைச் செய்ததோடு சோவியத் கவிழ்க்கும் சதியையும் செய்தனர் என்றார் அவர்.
ஒரு உள்நாட்டு போரினைத் தவிர்க்கவேண்டிய ஒரு கட்டாய சூழலில்தான் னன்று அதிபர் பதவியிலிருந்து விலகியதாக கோர்ப்பாசேவ் மேலும் தெரிவித்தார்.
சோவித் யூனியன் சிதைந்ததற்கு கோர்ப்பாசேவ் தான் காரணம் என்று ரஷ்ய மக்களால் பழி சுமத்தப்பட்டாலும், பனிப்போரினை முடிவுக்கு கொண்டு வர உதவிய ஒரு கதாநாயகனாக கோர்ப்பாசேவ் உலக மக்களால் பார்க்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.