News Update :

Thursday, December 8, 2016

TamilLetter

உள்ளூராட்சித் தேர்தல் அடுத்த ஆண்டு ஜூன் மாதமே சாத்தியம்!



உள்ளூராட்சி மன்றத் தேர்தலை புதிய முறையில் நடத்தும் தீர்மானத்திலிருந்து ஒருபடியேனும் பின்வாங்கும் எண்ணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இல்லை என்று அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்று தெரிவித்தார். ஆளும் கட்சியிலுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியின் வீட்டில் கூடி உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முறை குறித்து ஆராய்ந்தபோதே ஜனாதிபதி தனது நிலைப்பாட்டினை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

இதேவேளை இயலுமானவரை தேர்தல் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் ஜனாதிபதி இக்கூட்டத்தின்போது மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் பைசல் முஸ்தபாவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும் அமைச்சர் பைசர் முஸ்தபா 2017ன் முதல் காலாண்டிற்குள் தேர்தலை நடத்துவதற்காக முயற்சித்தாலும் ஜூன் மாதமளவிலேயே தேர்தல் நடைமுறை சாத்தியப்படும் என்றும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா குறிப்பிட்டார்.

நிதி அமைச்சில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார். "பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அரசியல்வாதிகள் தேர்தல் குறித்து முன்வைக்கும் கருத்துக்களால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதனால் உண்மையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் எமக்கு ஏற்பட்டுள்ளது.பலர் பழைய முறையில் தேர்தலை நடத்த விரும்புகின்றனர். ஆனால் தேர்தல் வாக்குறுதிகளின்படி புதிய முறையில் தேர்தலை நடத்துவதற்காகவே மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்தனர் என்றார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-