News Update :

Friday, December 16, 2016

TamilLetter

அட்டாளைச்சேனை உயர்பீட உறுப்பினருக்கு அமைச்சர் ஹக்கீம் விலாசல்

றியாஸ்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் பிரச்சினைக்கு தீர்வு கானும் பொருட்டு செயலாளர் நாயகம் ஹஸனலிக்கு  தேசியப் பட்டியல்; பாராளுமன்ற உறுப்பினராக்குவதற்கு கட்சியின் தலைமை முடிவெடுத்துள்ளது.

அட்டாளைச்சேனையின் மூத்த உறுப்பினரும் கட்சியின் உயர்பீட உறுப்பினரும்,தேசியப் பட்டியலை எதிர்பார்த்துக் காலத்தை கடத்திய ஒரு நபர் ஹஸனலிக்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்க தலைவர் இணங்கியுள்ளதை அறிந்து பெரும் ஆத்திரப்பட்டார்.

தகவல் அறிந்ததும்  தலைவரை உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்ற போதும் அது கை கூடாமல் போனது.
மீண்டும் மீண்டும் முயற்சி செய்த அந்த நபருக்கு ; இரவு 11.45 மணிக்கு பலன் கிட்டியது.

உடனடியாக தலைவரின் ஸலாத்துக்கு பதில் சொல்லி விட்டு எப்படி எங்களுக்குறிய எம்.பியை ஹஸனலிக்கு வழங்குவீர்கள் அட்டாளைச்சேனைக்கு தொடர்ச்சியாக அநியானம் செய்து வருகின்றீர்கள் நாங்கள் விட மாட்டோம் அட்டாளைச்சேனை மக்கள் முட்டாள்கள் என்று நினைத்துள்ளீர்களா என தனது ஆத்திரத்தை கொட்டித் தீர்த்தார்.

மறுமுனையில் தலைவர் சில விடயங்களை நியாயப்படுத்த எத்தனித்த போது மூத்த போராளிக்கு இன்னும் இன்னும்  கோபத்தையே ஏற்படுத்தி வாா்த்தைகள் இடம் மாறினது..

இவரின் பேச்சில் அதிர்ப்தியுற்ற தலைவர் என்ன பேசுவதென்றே புரியாமல் அட்டாளைச்சேனைக்கு இப்ப வழங்க முடியாது அதற்கான தகுதியான ஆட்களை நான் இன்னும் அடையாளம் கானவில்லை எனவே கட்சியின் தலைமை எடுத்த முடிவுக்கு கட்டுப்பட வேண்டுமென பெரும் தொனியில் பதிலளித்தார்.

அதற்கு மூத்த போராளி-அப்ப அட்டாளைச்சேனையில் உள்ள யாருக்குமே எம்.பி ஆகுவதற்கு தகுதியில்லையா அப்ப  நாங்கள் பார்ப்போம் என்றார்.

தலைவர்- உங்களைப் போன்றவர்களுக்குத்தான் பதவி தேவை ;; மக்கள் எம்.பியை கேட்கவில்லை நான் மக்களுக்கு தெளிவு படுத்துகிறேன்.பிறகு பேசுவோம் என்று கூறி தொலை பேசியை துண்டித்து விட்டார் தலைவர்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-