News Update :

Sunday, December 11, 2016

TamilLetter

திருக்கோவிலில் கடல் நீர் உட்புகுந்தது





வரலாற்றுப்பிரசித்தி பெற்ற அம்பாறை- திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தினுள் இன்று அதிகாலை கடல் நீர் உட்புகுந்தது. ஆலயத்தினை அடுத்து சுமார் 500 மீட்டர் தொலைவிலுள்ள கடற்கரையில் இருந்து இன்று அதிகாலை கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. சுமார் 100 மீட்டருக்கும் கூடுதலான தூரம் கடலில் இருந்து கடல் நீர் ஊருக்குள் வந்துள்ளது.

இதனால் மக்கள் பரபரப்புடன் சுனாமியென்று பயந்து ஓடினர். ஆலய சூழலில் மண் புழுக்கள் இறந்து காணப்பட்டன. ஆலய ஒலி பெருக்கி மூலம் மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் ஸ்தலத்திற்கு விரைந்து ஆலய நிருவாகத்தினருடன் கலந்துரையாடி சேத விபரங்களைப் பார்வையிட்டார். அங்கிருந்த மீனவர்களது வலை மற்றும் தோணிகளும் வெகுவாக சேதமடைந்திருந்தன.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-