News Update :

Wednesday, December 21, 2016

TamilLetter

: நாளைக்கு நீண்ட பகல், நீண்ட இரவு


நாளை பூமியின்  வட துருவத்தில் குளிர் காலமும், தென் துருவத்தில்  வெப்பகாலமும் நிலவுவதால், நாளை வட துருவத்தில் மிகக்  குறுகிய  பகல் நேரமும்,   தென் துருவத்தில் மிகவும் நீண்ட  பகல் பொழுதும் நிகழவிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டு இறுதியும் இந்த  " Solstis" நிகழ்வு   ஏற்படுவது வழக்கமாகும். 
"solstis" நிகழ்வு   வானின் மிகவும்  தாழ்வான புள்ளிக்கு வருவதால்  வட துருவத்தில் மிகவும் குறைவான  பகல் பொழுது நிகழும்.  அதே நேரத்தில் தென் துருவத்தில்,  வானில் மிகவும் உயரமான  புள்ளியில் சூரியன் உதிப்பதால், அப்பகுதியில்  நீண்ட பகல் நேரம் ஏற்படும் . அந்த  வகையில்,  நாளை 2016-ஆம் ஆண்டுக்கான மிகவும் நீண்ட பகல் நேரம் ஏற்படும் " என பிளெனெட்டேரியத்தின்  அறிவியல் அதிகாரியான முகமது சம்ரி மாஸ்டோர் தெரிவித்தார். 
 "solstis" நிகழ்வு,  ஒவ்வொரு ஆண்டும்  பூமியின் அச்சு   23.5 டிகிரிக்கு சாய்வதால்   ஏற்படுவது வழக்கம் தான் என அவர் தெரிவித்தார். 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-