News Update :

Saturday, December 24, 2016

TamilLetter

ஜப்பான் மொழியில் டிஜிட்டலில் ரஜினியின் ‘பாட்ஷா’ படம்!



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வெற்றிபடங்களில் ஒன்றான பாட்ஷா திரைப்படம் 'டிஜிட்டல்' முறையில் ஜப்பான் நாட்டில் வெளியாகவிருக்கிறது.
தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படம் ரஜினியின் ‘பாட்ஷா’  ‘நான் ஒரு தடவை சொன்னால் நூறுதடவை சொன்ன மாதிரி’ என்று ரஜினி பேசும் வசனமும், ‘பாட்ஷா’ படத்தில் இடம்பெற்ற ‘நான் ஆட்டோக்காரன்...’ உள்ளிட்ட பாடல்களும் இன்றும் ரசிகர்களை துள்ளல் போட வைப்பதாக இருந்து வருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘பாட்ஷா’ படத்தில் ரஜினியின் அபார நடிப்பு, விறுவிறுவென நகரும் திரைக்கதை, ரகுவரனின் நடிப்பு, தேவாவின் இசை மற்றும் வியக்க வைக்கும் அதிரடி காட்சிகள் ஆகியவை தனி சிறப்பபாக விளங்கின.
தயாரிப்பு துறையில் 50-ஆவது வருடத்தை நிறைவு செய்திருக்கும் ‘சத்யா மூவீஸ்’, அதனை சிறப்பிக்கும் விதமாக ‘பாட்ஷா’ படத்தை, நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 5.1 டிஜிட்டல் ஒலி அமைப்பில் வெளியிட இருக்கின்றது.
இது குறித்து சத்யா மூவீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “டிஜிட்டல்' தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும் பாட்ஷா படத்தின் முன்னோட்டம் வெளியான சில நிமிடங்களிலேயே, சமூக வலைத் தளங்களில் முன்னிலை வகிக்க ஆரம்பித்து விட்டது.
ஜப்பான் நாட்டு ரசிகர்கள் எப்போதுமே ரஜினி படங்களைத் திருவிழா போல் கொண்டாடுவார்கள். அந்த வகையில் அவர்கள் இந்த டிரைலருக்கு அளித்த ஆதரவை வெறும் வார்த்தைகளால் சொல்ல இயலாது. சென்னையில் நடைபெற இருக்கும் சிறப்பு காட்சிக்கு ஜப்பான் ரசிகர்கள் வருகிறார்கள். அவர்கள் ரஜினிகாந்த்தை நேரில் சந்திக்கவும் இருக்கிறார்கள்.
டிஜிட்டல் பதிப்பில் உருவாகி இருக்கும் ‘பாட்ஷா’ படத்தை ஜப்பானில் ‘ஸ்பேஸ் பாக்ஸ் ஜப்பான்’ நிறுவனம் வெளியிடுகிறது. தற்போது படத்தின் வசனங்களை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நவீன டிஜிட்டல் ‘பாட்ஷா’ வருகின்ற ஜனவரியில் வெளியாகிறது என்று தெரிவித்துள்ளனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-