News Update :

Saturday, December 31, 2016

TamilLetter

அமைச்சர் ஹக்கிமுக்கு ஹரீஸ் பதிலடி



குல்ஸான் எபி

அம்பாரை மாவட்டத்தில் பிறந்த சாதாரண பொது மகனுக்கும் அரசியலில் காய் நகர்த்தும் திறமை அதிகமாகவே காணப்படுகின்றது.இந்த சமார்த்தியத்தை அழகாக கற்றுத் தந்துள்ளார் எமது பெருந் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் என விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரிஸ் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் தலைமையில் நேற்று(31) அட்டாளைச்சேனையில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் ஹரீஸ் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கட்சியின் ஆணிவேராக அம்பாரை மாவட்ட மக்கள் உள்ளனர்.ஆனால் ஒரு குறிப்பிட்ட அதிகாரங்களோடுதான் நாங்கள் செயற்படுகின்றோம.; இம் மாவட்டத்தில் பலம் பொருந்திய அமைச்சராக தயா கமகே இருந்து கொண்டு இனத் துவோசம் காட்டி வருகின்றார். அதன் வெளிப்பாடுகள்தான் கல்முனையில் இயங்கி வந்த பல தினைக்களகங்கள் அம்பாரைக்கு மாற்றப்பட்டு வருகின்றது.

இப்பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் நியாயம் கேட்டால் கல்முனையில்;  போதிய வசதியில்லையென இதற்கு பொறுப்பான பெண் அமைச்சர் பதிலளிக்கிறார்.இந்த அமைச்சருக்கு எதிராக நான் பாராளுமன்றத்தில் செயற்பட முற்பட்ட போது எனது கையையும் வாய்யையும் கட்டி போட ஒருத்தர் முனைகின்றார்.யாருக்காக பயப்பட வேண்டும் நாமேதான் ; இந்த ஆட்சியை உறுவாக்கினோம் ஆனால் இந்த அரசாங்கமே நமக்கெதிராக இன்று செயற்படுகின்றது.எனவே அடுத்த சில மாதங்களுக்குள் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் வாதிகள் இந்த அரசாங்கத்திற்கு பாடம் புகட்டவுள்ளோம் அப்போதுதான் எங்களுடைய கால்களை அவர்கள் பிடிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இன்று அட்டாளைச்சேனை மக்கள் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க வேண்டுமென்று ஜூம்மா பெரிய பள்ளிவாசலில் தீர்மானம் மேற் கொண்டுள்ளனர்.அந்த தீர்மானத்தை கட்சியின் பிரதித் தலைவர் என்பதைவிட அம்பாரை மாவட்டத்தை சேர்ந்தவன் என்ற வகையில் நான் வழிமொழிகிறேன். 

அத்தோடு கடந்த பொதுத் தேர்தலின் போது கட்சியின் தலைவரினால் பகிரங்கமாக அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தார்.
தலைவர் மக்கள் முன் வழங்கிய வாக்குறுதியை இத் தறுணத்தில் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்.ஏனெனில் இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் திருகோணமலை மாவட்டத்திற்கும் அட்டாளைச்சேனைக்கும் வழங்குவதற்கு ஏற்கனவே கட்சியினால் முடிவெடுக்கப்பட்டிருந்தது.

அட்டாளைச்சேனை மக்களுக்கு மீண்டும் மீண்டும் பூச்சாண்டி காட்டாமல் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி அட்டாளைச்சேனை மக்களுக்கு உரிய கௌரவத்தை வழங்குங்கள். இந்த விடயத்தில் அம் மக்கள் மிகவும் தெளிவாகவுள்ளனர்.

அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் விடயத்தில் நானும் தெளிவாக   இருக்கின்றேன் அந்த மக்களிடம் வாக்குறுதியளித்தபடி கட்சியின் தலைமை தான் வழங்கிய வாக்குறுதியை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும்.இவ் விடயத்தில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றார்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர்,ஊயர்பீட உறுப்பினர்களான யு.எல்.வாஹீட், சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர்,முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில்,முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தமிம் ஆப்தீன் உட்பட பெருந் திரளான பொது மக்களும் கல்வியாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.

.





.

.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-