News Update :

Thursday, December 29, 2016

TamilLetter

ரணிலுக்கு முடியுமாயின் எனக்கும் முடியும் : மஹிந்த


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பணியாற்ற தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முடியுமாயின் தனக்கும் அது இயலும் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், மீண்டும் ஜனாதிபதியாகும் எண்ணம் தனக்கு இல்லை என்று தெரிவித்துள்ள அவர், ஜனாதிபதியாகாமலேயே தம்மால் நாட்டை நிர்வாகிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பணியாற்றும் வெளிநாட்டு ஊடகங்களின் ஊடகவியலாளர்களுடன் நேற்று நடத்திய சந்திப்பின்போதே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்கீழ் பிரதமராக நியமிக்கப்பட்டால், அவருடன் இணைந்து பணியாற்ற முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,
தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அது முடியுமாயின், 1970 ஆண்டுகளிலிருந்து நன்றாக பரீட்சயமானவருடன் தனக்கு பணியாற்ற முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவ்வாறான நிலைமை ஒன்று உருவானால் தனக்கு தேவையான நிபந்தனைகளுக்கு அமையவே இதனைச் செய்ய முடியும் என்றும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-