தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனின் உருவப்படம் இன்று வவுனியாவில் எரிக்கப்பட்டது. வவுனியா பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு முன்பாக தமிழர் தாயக்தின் கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி கண்டறியும் சங்கத்தால் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தின் இறுதியிலே சம்பந்தனின் உருவப்படம் எரிக்கப்பட்டதோடு, எரியூட்டப்பட்ட உருவப்படத்தை சூழ பெண்கள் கூட்டமாக நின்று எதிர்க்கட்சி தலைவருக்கு எதிரான கோசங்களையும் எழுப்பினர்.