News Update :

Tuesday, December 20, 2016

TamilLetter

பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதியை ஹஸனலியிடம் வழங்கினாா் அமைச்சர் ஹக்கீம்

சிறாஜ்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளும் பொருட்டு முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.சல்மான் தனது பதவியை  அவசர அவசரமாக ராஜினாமா செய்தாா்.
பாராளுமன்ற உறுப்பினர் தனது ராஜினமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் அவர்களுக்கு அனுப்பியுள்ளதாகவும்  அனுப்பப்பட்ட    கடிதத்தின் பிரதியை கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் கட்சியின் செயலாளர் ஹஸனலியிடம்  இன்று காலை ஒப்படைத்ததாகவும் அறிய முடிகிறது.
எதிர்வரும் 7ம் திகதி கட்சியின் தேசிய பேராளார் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக மீண்டும்   ஹசன் அலி நியமிக்கப்படுவார் ,  எனவும் கட்சியின் தலைரும் அமைச்சருமான ரவுப்  ஹக்கீம் அண்மையில் கண்டியில் வைத்து தெரிவித்திருந்தார்.
இதேவேளை, தலைவருக்கு  எதிரான  முரண்பாட்டு   நிலைமைகள் ஹஸனலியின் இன்றைய சந்திப்பின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தாா்.
அதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் யாப்பு மீளவும் திருத்தி அமைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-