News Update :

Tuesday, December 20, 2016

TamilLetter

இலங்கை – மலேசியா கல்வித்துறை உறவை மேம்படுத்த ஹிஸ்புல்லாஹ்வுடன் பேச்சு





இலங்கையின் கல்வித்துறை அபிவிருத்தியில் பங்கு கொள்வது தொடர்பாக மலேசியாவின் “International University of Malaya – Wales ”  மற்றும்  “Vision College” ஆகிய பல்கலைகழகங்கள் “மட்டக்களப்பு கெம்பஸ்” தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டது. 

இன்று செவ்வாய்க்கிழமை மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலில்  “International University of Malaya – Wales ”  பணிப்பாளர் ஆந்தோனி மைக்கல் மற்றும்  “Vision College”    நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆண்ரியன் தோன்ங்; உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். . 

இதன் போது, இலங்கையின் கல்வித்துறை அபிவிருத்தியில் பங்கு கொள்வதற்கு இவ்விரு பல்கலைகழகங்களும் விருப்பம் தெரிவித்ததுடன், மட்டக்களப்பு கெம்பஸ{டன் துறைசார்ந்த உறவுகளை பேணுவது தொடர்பிலும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டது. 

media unit of State Minister of Rehabilitation and Resettlement
R.Hassan

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-