News Update :

Thursday, December 22, 2016

TamilLetter

முதலில் எம்.பி பிறகு தலைமைத்துவம் -ஹஸனலி ஆதரவாளன் -பௌஸ்-



வடக்கு கிழக்கு மக்கள் இரத்தம்சிந்தி,உயிரை இழந்து போராடி உறுவாக்கிய எமது கட்சியை எங்கிருந்தோ வந்து  உரிமை கொண்டாடி எமது இரத்தத்தை அட்டைப் புழுபோல் உறிஞ்சி குடிக்கும் ஒரு சுயநலவாதியிடமிருந்து கட்சியை மீட்பதே இன்றை காலகட்டத்தின் தேவையாக மாறியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால போராளிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

கட்சியிலிருக்கும் ஒரே ஒரு அடிமரம் ஹஸனலிதான் அந்த மரத்தையும் சாய்த்து விட்டால் கட்சியின் வராலாறு மத்திரமல்ல கட்சியின் பிறப்பிடமே கண்டியாக மாறிவிடும் அதற்கான ஏற்பாடுகள்தான் ரவூப் ஹக்கீமால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

யூதனுக்கு அடைக்கலம் கொடுத்து தமது மண்ணை இழந்த பலஸ்தீனம் போல்  எங்கள் கட்சியில் தஞ்சம் புகுந்து எம்மை விரட்டுகிறாய்.ஆனால் அது உன்னால் முடியாது. மரணம் எங்களை தொடும்வரை உன்னை அகற்றாமல் விடுவதில்லை.

பயங்கார வாதிகளின் துப்பாக்கி ரவைகளுக்கு மார்வைக் காட்டிய வீர புருஷர்கள் நாங்கள் உனது பானியிலே பதில் சொல்ல புறப்பட்டு உன்னை பணயக் கைதியாக்கியுள்ளோம்.

நீ 16 வருடங்கள் இந்த மண்ணில் அரங்கேற்றிய தொடர் நாடகத்திற்கு கிழக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.;; உன்னிடம் இருக்கும் அதிகாரத்தை முதலில் கைப்பற்றுவது,அதில் பலம் சேர்ப்பது பின் உன்னை இம் மண்ணிலிருந்து வெளியேற்றி கட்சியை தூய்மைப்படுத்துவது .

அதற்கான முதல் புள்ளியே தேசியப்பட்டியல்



TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-