குல்ஸான் எபி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக்கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு அமைச்சர் ரவுப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் நடைபெறவுள்ளது.
அன்று நடைபெரும் கூட்டத்தில் மிக முக்கியமாக பேசப்பட்டு வந்த கட்சியின் உத்தியோகபூர்வ செயலாளர் விவகாரம் தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை மேற் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் கட்சியின் தலைமை உள்ளது.
இக் கூட்டத்திற்கு ஹஸனலி அழைக்கப்பட்டுள்ளதாகவும் அழைப்பையேற்ற செயலாளர் தமக்கு விசுவாசமான உயர்பீட உறுப்பினர்களை அழைத்து கூட்டத்தில் பேசப்பட வேண்டிய விடயம் தொடா்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்தோடு கூட்டத்தின் முக்கிய விடயமாக கட்சியின் பேராளர் மாநாடு தொடர்பில் ஆராயப்படவுள்ளதுடன் மாநாட்டை நடத்தும் திகதி மற்றும் இடமும் தீர்மானிக்கப்படவுள்ளன.
மேலும் பேராளர் மாநாட்டில் முன்வைக்கவுள்ள யாப்புத் திருத்தம் தொடர்பிலும் உயர்பீட உறுப்பினர்கள் அவதானம் செலுத்தி வருகின்றனர்.