News Update :

Monday, December 26, 2016

TamilLetter

மார்க்கம் மாநகர மேயருக்கும் சி.விக்கும் இடையில் இரட்டை நகர உடன்படிக்கை



எதிர்வரும் 2017 ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வடக்கு முதல்வர் சி.வி விக்னேஸ்வரனுக்கும் கனடா மார்க்கம் மாநகர மேயர் திரு பிராங் ஸ்காபிட்ரிக்கும் இடையில் இரட்டை நகர உடன்படிக்கை ஒன்று கைச்சாத்தாகவுள்ளது.

சி.வி விக்னேஸ்வரனின் கனடா விஜயம் தொடர்பில் கடந்த வாரம் இடம் பெற்ற ஊகவியலாளர் சந்திப்பின் போது ஏற்பாட்டுக்குழு இவ்வாறு அறிவித்துள்ளது.
ஜனவரி 7, 2017இல் நடைபெறவுள்ள அனைத்து ஊடகங்களுக்குமான சந்திப்பு பற்றியும் ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள முதல்வருடனான ஒரு மாலைப் பொழுது என்ற நிதிசேர் நிகழ்வைப் பற்றியும் இதன் போது குறிப்பிடப்பட்டது.

இதேவேளை, குறித்த உடன் படிக்கையின் போது மேம்படுத்தப்படவுள்ள தாயக நகரமாக முல்லைத்தீவு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதல்வரின் வருகையில் முக்கியத்துவம் பெறுகின்ற நிகழ்வான இரட்டை நகர உடன்படிக்கை குறித்தும் இரட்டை நகர உடன்படிக்கைக்கான தோற்றம், அதன் பயன்கள், எதிர்காலத்தில் அது பெறப்போகும் வளர்ச்சி என்பன தொடர்பில் மார்க்கம் நகரசபை உறுப்பினர் லோகன் கணபதி இதன் போது தெரிவித்திருந்தார்.

இவ் உடன்படிக்கையினூடாகப் போரினால் பாதிக்கப்ட்ட முல்லைத்தீவு நகர் மேம்படுத்துவதற்குரிய நகராக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-