News Update :

Thursday, December 22, 2016

TamilLetter

இஸ்லாத்தையும் தொழுகை நேரத்தையும் அவமதித்த பெண் கைது



தனது முகநூலில் இஸ்லாத்தைப் பற்றியும் தொழுகை நேரத்தைப் பற்றியும் இழிவுப்படுத்தி பதிவு செய்திருந்த பெண்ணை நேற்று போலீசார் கைதுச் செய்தனர். சிம்பாங் ரெங்காமில் உள்ள அவரின் வீட்டில் போலீசார் அப்பெண்ணைக் கைதுச் செய்தனர்.
26 வயதான அப்பெண், சில நாட்களுக்கு முன் தனக்கு சொந்தமான முகநூலில் கணக்கில், அதான் தொழுகை நேரத்தினால் தங்களது தூக்கம் கெடுவதாக பதிவுச் செய்திருந்தார். அவரின் பதிவைப் பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அதற்கு மறுப்பு கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். 
இந்நிலையில், அப்பெண்ணின் கருத்து சமய நல்லிணக்கத்திற்கு எதிரானது என சமூக அமைப்புகள் போலீசில் புகார் செய்திருந்தன. இதனை அடுத்து போலீசார் மேற்கொண்ட சோதனையில், அப்பதிவு பத்து பகாட் பகுதியிலிருந்து பதிவிடப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் விசாரித்த போலீசார். குளுவாங் அருகே உள்ள சிம்பாங் ரெங்காம் தாமான் ரேகாமாசில் உள்ள ஒரு வீட்டில் 26 வயதான பெண்ணைப் போலீசார் நேற்று இரவு 8 மணிக்குப் போலீசார் கைதுச் செய்தனர்.
இதனைப் பற்றி கருத்துரைத்த ஜொகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஶ்ரீ வான் அமாட், இம்மாதிரியான கருத்துகள் நாட்டின் நல்லிணத்திற்கும் நிம்மதியற்ற பதட்டமான சூழ்நிலையையும் உருவாக்கும் என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார். அப்பெண்ணிடமிருந்து கணினி ஒன்றும் கைப்பேசி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணைக்கு உதவும் வகையில் கைதுச் செய்யப்பட்ட பெண்ணை ரிமாண்டில் வைக்க கோரியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-