News Update :

Sunday, December 25, 2016

TamilLetter

மாயமான ரஷ்ய விமானம்: கருங்கடலில் பாகங்கள் மீட்பு



91 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த போது, ராடார் கருவியிலிருந்து மாயமான ரஷ்ய இராணுவ விமானத்தின் பாகங்கள்  கருங்கடலில் மீட்கப்பட்டுள்ளது.
Tu-154 என்ற அந்த விமானம் கருங்கடலின் 1.5 கிலோமீட்டர் தூரத்தில், 50-70 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக, ரஷ்ய தற்காப்பு அமைச்சு உறுதி செய்துள்ளது.
இன்று அதிகாலை 5.40 மணிக்குப் புறப்பட்ட அந்த இராணுவ விமானம்,  கடல் வான் பகுதியை அடைந்தபோது, ராடார் கருவியிலிருந்து காணாமல் போனது, குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் லாதாகியா எனும் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள  ரஷ்ய ஆயுதப்படைத் தளத்திற்கு வழக்கமான பயணத்தை மேற்கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது. 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-