News Update :

Wednesday, December 28, 2016

TamilLetter

அட்டாளைச்சேனையில் ஏமாற்று வித்தை காட்டும் பிரதியமைச்சர் பைஸல் காசீம்;



சேனையூர் முக்சித் அகமட்

பிரதியமைச்சர் பைஸல் காசீமிடம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஒரு நபர் தேசியப்பட்டியல் எம்பியை பெற்றுத் தருமாறு ஒரு இலசான வேண்டுகோள் விடுத்திருந்தார். ணே;டுகோள் விடுத்த நபருக்கு பைஸல் காசிமைப்பற்றிய போதிய தகவலும் அறிமுகமும் இல்லையென உணர்கின்றேன்.

அந்த அடிப்படையில் பைஸல் காசீமுடைய அறிமுகத்தை நான் சொல்ல வேண்டிய தேவை எனக்கும் இந்த ஊருக்கும் உள்ளது அதனால்தான் சில முக்கிய விடயங்களை நான் கூறுகின்றேன் தோழா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான பைஸல் காசீமிடம் எப்படி நாம் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுத் தர வேண்டுமென கோரிக்கை விடுவது.

புிரதியமைச்சர் பைஸல் காசீமை நிந்தவூர் மக்களே புறக்கனித்த சந்தரப்பத்திலும்; கனிசமான ஆதரவை வழங்கி மூன்று முறை பாராளுமன்றத்திற்கு அனுப்பி அழகு பார்த்தது இந்த  அட்டாளைச்சேனை மக்களதான்;.

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் கொடுத்ததற்கு பிற்பாடுதான் நான் பாராளுமன்றத்திற்கே செல்வேன் என அட்டாளைச்சேனையில் போடப்பட்ட அணைத்து அரசியல் மேடைகளில் கூவித்திருந்த பைஸல் காசீம் இன்று எம்.பியாகி பிரதியமைச்சரானதும் அதையெல்லாம் மறந்து தனது சுகபோக வாழ்க்கையை தனது சகாக்களோடு அனுபவித்து வருகின்றார்.

சுகாதார பிரதியமைச்சராக எம்.ரீ.ஹஸனலி இருந்த போது ஒவ்வொறு பிரதேசத்திற்கும் கட்சிக்காக பாடுபட்ட நபர்களை இணைப்பாளர்களாகவும்,பிரத்தியோக செயலாளராகவும் நியமித்தார்.ஆனால் அதே அமைச்சை பெற்றிருந்த பைஸல் காசீம் தனது குடும்ப உறவுகளையும்,தனது வியாபார நண்பர்களையுமே இணைப்பாளராகவும் செயலாளராகவும் நியமித்துள்ளார்.

இதில் வேடிக்கையான விடயம் எனில் நமது கட்சிக்கு எதிராக செயற்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஒருத்தரின் செயலாளரை இவரின் செயலாளராக நியமித்துள்ளார்.அத்தோடு தனது மச்சான,; தனது மருமகன்,இன்னுமொறு உறவுக்கார மச்சான் என அனைத்து பேருக்குமே வாகனங்களுடன் சம்பளப் பதவிகள்
கட்சிக்காகவும்,இவருக்காகவும் இரத்தம் சிந்தி,வியர்வை சிந்தி வழக்குகள்,சண்டைகள்,விவாதங்கள் என ஏகப்பட்ட பிரச்சினைகளை நோக்கி; நாற்பது வயதைத் தாண்டிய எத்தனை பேர்; எமதூரில் இருக்கத்தக்க தனது ஊரைச் சேர்ந்தவர்களுக்கே 70 தொழிலையும் வழங்கினாரே இது எப்படி நியாயம் சொல் தோழரே.

எம்.பி என்றாலும் அங்கே;தான் அமைச்சு என்றாலும் அங்கேதான் தொழில் என்றாலும் அங்கேதான் அப்படியானால் நாம் என்ன இவர்களுக்கு எழுதிக் கொடுத்த அடிமைகளா?
அட்டாளைச்சேனை மக்களே இன்னும் நீங்கள் வெறும் வாக்களிக்கும் உணர்ச்சியற்ற ரோபோக்களாக இருந்து 

விடப்போரீர்களா?.
காலம் நீண்டதல்ல



TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-