அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்வு செய்வதை தடைவிதிக்க சென்னை ஐகோர்ட்டு மீண்டும் மறுத்துள்ளது.
அ.தி.மு.க.வின் ராஜ்ய சபா எம்.பி.யாக இருப்பவர் சசிகலா புஷ்பா. இவரும், இவரது கணவர் லிங்கேஸ்வர திலகம் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர்.
அந்த வழக்கு மனுவில், ‘அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அப்பதவிக்கு புதிய நபர்களை தேர்வு செய்ய அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முயற்சித்து வருகின்றனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலாவை தேர்வு செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர். கட்சியின் தொண்டர்களின் கருத்தை கேட்காமல், இவர்கள் சசிகலாவை தேர்வு செய்கின்றனர். இதற்கான கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய தடைவிதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு கடந்த 16–ந் தேதி நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பிலும், அ.தி.மு.க. சார்பிலும் மூத்த வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டார்கள். இதையடுத்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பதவி ஏற்க தடைவிதிக்க முடியாது என்ற நீதிபதி, இந்த வழக்கில் அ.தி.மு.க. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலா புஷ்பா, லிங்கேஸ்வர திலகம் ஆகியோரது மனுக்களை நிராகரிக்கவேண்டும் என்று அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தள்ளிவைப்பு
அப்போது சசிகலா புஷ்பா சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘அ.தி.மு.க. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. அதனால், பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்வு செய்ய இடைக்கால தடைவிதிக்க வேண்டும். கட்சியை நிர்வகிப்பதில் தற்போதைய நிலையே தொடரவேண்டும்’ என்று கேட்டார்.
ஆனால் நீதிபதி தடை எதுவும் விதிக்க நீதிபதி மறுத்துவிட்டார். விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (23–ந்தேதி) தள்ளிவைத்து உத்தரவிட்டார்.