News Update :

Wednesday, December 28, 2016

TamilLetter

இளைய தளபதி விஜய்யோடு மீண்டும் இணையும் ஜோதிகா



திருமணமாகி 10 வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார் நடிகை ஜோதிகா. அண்மையில் இவரின் நடிப்பில் வெளிவந்த 36 வயதினிலே வெற்றி படமாக அமைந்த நிலையில், அடுத்து இவர் இளைய தளபதி விஜய்யுடன் மீண்டும் இணையவிருக்கிறார்.
குஷி படத்தில் விஜய் மற்றும் ஜோதிகா இருவரின் நடிப்பைப் பார்த்து ரசிக்காதவர்களே இருக்க முடியாது. இந்த ஜோடி மீண்டும் திருமலை படத்திலும் இணைந்தது. 
இந்நிலையில், இவர்கள் இருவரையும் மீண்டும் இணைய வைத்துள்ளார் இயக்குனர் அட்லி. தெறி படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்கும் அட்லி இம்முறை ஜோதிகாவைக் குறி வைத்துள்ளார். 
ஜோதிகாவுக்கு படத்தில் முக்கிய பாத்திரம் உள்ளது என அட்லி கூறியதாக சினிமா வட்டாரம் தெரிவிக்க, இன்னொரு செய்தியும் வெளிவந்துள்ளது. அதாவது, படத்தில் மொத்தம் மூன்று நாயகிகள் என்றும் அதில் ஒரு முக்கிய பாத்திரமே ஜோதிகா எனவும் செய்தி வெளியாகியுள்ளது.
ஆனாலும், படப்படிப்பு தொடங்கிய பின்னரே இது குறித்த அதிகாரப்பூர்வ செய்திகள் வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-