News Update :

Wednesday, December 28, 2016

TamilLetter

அமெரிக்காவிற்கு எதிராக துருக்கி ஜனாதிபதி




அமெரிக்கா ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவாக உள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் துருக்கி ஜனாதிபதி தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி ஜனாதிபதியான Recep Tayyip Erdogan கடந்த செவ்வாய்கிழமை நடந்த கூட்டத்தில் அமெரிக்காவின் மீது பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.
அதில் அவர், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் தீவிரவாதத்திற்கு ஆதரவாக உள்ளனர் என கூறியுள்ளார்.

அவர்கள் தீவிரவாதி படைகளுக்கு ஆதரவு அளித்து வருவதாகவும், அதில் ஐஎஸ் தீவிரவாதிகள், YPG மற்றும் PYD யும் அடங்கும் என கூறியுள்ளார்.
அமெரிக்கா தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருப்பதை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தெளிவுப்படுத்துகின்றன என கூறியுள்ளனர்.

மேலும் அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் சிரிய ஜனாதிபதியான Bashar Al-Assad’s க்கு எதிராக கிளர்ச்சியாளர்களை உருவாக்கி வருவதாகவும், இதை தாம் முறியடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-