News Update :

Friday, December 30, 2016

TamilLetter

அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து பெண்களுக்கு சமூக ஆளுமை விருது

குல்ஸான் எபி


















மறுமலர்ச்சி நிறுவனததின் 18வது ஆண்டு நிறைவு விழா நிறுவனத்தின் தலைவர் ஏ.எல்.றமீஸ் தலைமையில் இன்று(30) அட்டாளைச்சேனை பல நோக்கு கூட்டுறவு சங்க கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. 

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்;,அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரனி எம்.ஏ.அன்ஸில்,முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ்,தமீம் ஆப்தீன்,யாஸீர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது சுமார் 25 ஆண்டுகளாக பெண்கள் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த  காந்திமதி ஜோய்,வாணி சைமன்,துளசிமணி மனோகரராஜா,எம்.எச்.சுபைதா,பீ.பாரினா ஆகிய ஐந்து பெண்களுக்கு சமூக ஆளுமை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் நிதியொதுக்கீட்டின் மூலம் 200 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மரக் கன்றுகளும் பயனாளிகளுக்கு பகிர்ந்;தளிக்கப்பட்டது.

அத்தோடு  UNDP ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட   நிதியுதவின் மூலம்  மறுமலர்ச்சி நிறுவனம் செயற்படுத்திய சுற்றாடல் பாதுகாப்பு வழிமுறை தொடர்பான கையேடும் அதிதிகளால் வெளியீட்டு வைக்கப்படடன.  .;

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-