பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களாகச் செயற்படும் 58 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாடகைக்கு வாகனங்கள் வழங்கப்படவிருந்த திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படவிருந்த வாகனமொன்றுக்கு மாதாந்த தவணைக்கட்டணம், அதற்கான பெறுமானம், சேர் வரி, தேசத்தைக் கட்டியெழுப்பும் நிதி உட்பட மாதாந்தம் சுமார் ஏழரை லட்சம் ரூபா செலவாகும் என்பதால் அந்தத் திட்டம் இடை நிறுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
வாடகை அடிப்படையில் வாகனங்களை வழங்குவதற்கு பதிலாக அவர்களுக்கான வாகனங்களைக் கிரய அடிப்படையில் வழங்குவதற்கான மாற்றுத்திட்டம் ஒன்று தற்போது ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர், விசேட பணிப்பொறுப்புக்கள் அமைச்சர் ஆகியோர் கலந்தாலோசித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பிரதேச அபிவிருத்திக் குழுக்களுக்குத் தலமை தாங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னைய அரசு, அரச வாகனங்களை வழங்கியிருந்தது. அந்தப் பணிக்காக தற்போதைய அரசு, அரச வாகனங்களை வழங்கியிருந்தது.
அந்தப் பணிக்கான தற்போதைய அரசு இதுவரை 58பேருக்கு மாதாந்தம் 2லட்சம் ரூபாவை வழங்கி வந்நது. அதன்பின் அவர்களுக்கு வாடகை அடிப்படையில் வாகனங்களை வழங்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்ட போதும் அதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் நிமல் போப்பகே மறுத்ததையடுத்து திட்டம் இடைநிறுத்தப்பட்டதாக மகிந்த அமரவீர குறிப்பிட்டார்.