News Update :

Tuesday, December 13, 2016

TamilLetter

இளைய தளபதியின் 'பைரவா'- கட்டிக்காத்த இரகசியம் கசிந்தது!



இளைய தளபதி விஜய்யின் அடுத்த வெளியீடான 'பைரவா' படம் பற்றி பெரிதும் பாதுகாக்கப்பட்டு வந்த இரகசியம் வெளியே கசிந்துள்ளது படக் குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள 'பைரவா' படம் பொங்கல் சிறப்பு வெளியீடாக அமையவிரு ந்தது. இந்நிலையில் படம் பற்றி முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
'பைரவா' படத்தின் முக்கிய கதை அம்சம் அம்பலமானது. விஜய் இரட்டை வேடத்தில் வருகிறாராம். ஒரு கதாபாத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவ ராம். மற்றொரு கதாபாத்திரம் நகரத்தை சேர்ந்தவராம். விஜய் இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களுக்காக விஜய் இரண்டு கெட்டப் போட்டு உள்ளாராம்.
மேலும் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் விஜய்யே குரல் கொடுத்திருந்தாலும் அவை வித்தியாசமாக வந்துள்ளதாம். 'பைரவா' படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தார் விஜய். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானதால் இசை வெளியீட்டு விழாவை சப்தமில்லாமல் அடக்கமாக நடத்த முடிவு செய்துள்ளார் விஜய்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-