News Update :

Friday, December 16, 2016

TamilLetter

கலிபோர்னியாவின் நகர மேயராக இந்திய அமெரிக்கப் பெண் தேர்வு



அமெரிக்காவின், கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள குப்பெர்டினோ நகர மேயராக   இந்திய அமெரிக்கப் பெண்ணான சவிதா  வைத்தியநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
கலிபோர்னியாவின் முக்கிய நகரமான குபெர்டினோ நகரத்தில் தான் கம்ப்யூட்டர்  தயாரிப்பில் மிகப் பிரபலமான  "ஆப்பிள் "   நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு வாழும் அனைவரும் கல்வியறிவில் சிறந்து விளங்கி வருவதாக   "போர்ப்ஸ் " பத்திகை குறிப்பிட்டுள்ளது. 
குபெர்டினா நகரில் கடந்த  20 ஆண்டுகளாக வசித்து வரும் சவிதா வைத்தியநாதன் என்ற இந்தியப் பெண், அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே வாழ்ந்து வருகிறார். எம்.பி.ஏ பட்டதாரியான  அவர், கணித ஆசிரியராக ஒரு பள்ளியில் பணியாற்றி வந்ததோடு,   பின்னர் தனியார் வங்கியில் பணியாற்றியதுடன் பல்வேறு சமூகச் சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார். 
இந்நிலையில், குபெர்டினோ நகர மேயர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் அங்குள்ள மக்களின்  அமோக   ஆதரவைப் பெற்றார் சவிதா.   இதனையடுத்து, சமீபத்தில்  குபெர்டினோ நகர மேயராகப் பதவியேற்றார். அவரது  பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சவிதாவின் தாயார் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குப் புறப்பட்டுச் சென்றார். 
இந்நகரின் மேயராகப் பதவியேற்ற முதல் இந்தியப் பெண் என்ற வகையில் அமெரிக்காவின் பல பகுதிகளில் வாழும் இந்தியர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-