News Update :

Monday, December 19, 2016

TamilLetter

அல்லாஹுஅக்பர் என்ற கோஷத்தோடு ரஷ்ய தூதுவர்மீது துப்பாக்கிசூடு -



துருகிக்கான ரஷ்யா தூதுவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அங்காராவில் போலீசாரின் அடையாளை அட்டையை பயன்படுத்தி ரஷ்ய தூதுவர் கலந்துகொண்ட புகைப்பட கண்காட்சி ஒன்றுக்குள் புகுந்த துப்பாக்கிதாரி, தூதுவர் அந்திரேவ் கார்லோவை தாறுமாறாக சுட்டார்.

தலைநகர் அங்காரா, மாடர்ன் ஆர்ட் சென்டரின் இடம்பெற்ற புகைப்பட கண்காட்சியில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட ரஷ்ய தூதுவர் சுடப்படுவதற்கு முன்னர் “அலெப்போவை மறந்து விடாதே” என்று துப்பாக்கிதாரி உரத்த குரலில் கூறியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டபோது தூதுவர் அந்திரேவ் மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்தார்

துருக்கியின் உயர் பாதுகாப்பு போலீசார் அணிவதை போன்று கருப்பு கோர்ட் ஷூட் அணிந்து போலீசாரின் அடையாள அட்டை ஒன்றை காண்பித்து இந்த நபர் கட்டிடத்துக்குள் சென்றதாகவும் அல்லாஹு அக்பர் என்ற கோஷத்துடன் தூதுவரை நோக்கி சுட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. துப்பாக்கிதாரி அதே இடத்தில சுட்டுக்கொல்லப்பட்டார்.

இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று ரஷ்ய வெளிநாட்டு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சிரியாவில் நடந்துவரும் உக்கிர போரில் ரஷ்யா சிரிய தலைவர் பஷார் அல் ஆசாத்தின் சார்பில் போராடிவருகிறது. ரஷ்ய விமான தாக்குதல்களில் பெருமளவு பொதுமக்கள் கொள்ளப்பட்டது தொடர்பில் கடந்த நாட்களில் கண்டங்கள் எழுந்திருந்தன.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-