News Update :

Friday, December 30, 2016

TamilLetter

பான் கீ மூனின் இறுதி நாள்



ஐக்கிய நாட்டுச் சபையின் பொதுச் செயலாளராகத் திகழ்ந்த   பான் கீ மூன்-னின் பதவிக்காலம் நாளையோடு ஒரு முடிவுக்கு வருகிறது.   இந்நிலையில், நியூயார்க்கில் அமைந்துள்ள ஐ.நா தலைமையகத்தில், பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும் சேர்ந்து நடத்திய பிரியாவிடையின் போது,   "சிண்டரேலாவைப் போல் நாளை இரவு அனைத்தும் மாறப் போகிறது" என உணர்ச்சிப் பொங்க உரையாற்றினார்.  
அதோடு மட்டுமல்லாமல்,  தமது பதவிக்காலத்தின் போது, கடமையுணர்ச்சியோடு சேவையாற்றிய அனைத்து   பணியாளர்களுக்கும்  ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கீ மூன் நன்றி தெரிவித்துக்கொண்டார். 
"நாளை புத்தாண்டின் போது, டைம்ஸ் ஸ்குவேரில்  "Ball Drop" செய்யவிருக்கிறேன். நான் வேலை இழப்பதை, லட்சக்கணக்கான மக்கள் பார்க்கப்போகிறார்கள்" என கொரியாவைச் சேர்ந்த பான் கீ மூன் தெரிவித்தார். 
கடந்த 10 ஆண்டுகளாக ஐ.நா தலைமைச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் பான் கீ மூன்,  பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் தொடங்கி,  வறுமையை ஒழிப்பது மற்றும் அநியாயங்களுக்கு எதிராகப் பல்வேறு  நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.  
எனினும், சிரியா, ஏமன், தென் சூடான் மற்றும் லிபியா ஆகிய நாடுகளின்  அரசியல் நெருக்கடிகள் தொடர்ந்துக்கொண்டிருக்கும் போதே பான் கீ மூன் ஐ.நா-வை விட்டு விலகுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-