News Update :

Tuesday, December 20, 2016

TamilLetter

அலுத்கமையில் இரு சாராருக்கும் இடையில் ஏற்பட்ட சிறிய பிரச்சினை ஆட்சி மாற்றத்திற்கு சென்றது



ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் உள்ளோர் வேலை செய்ய முடியாத டாசன்கள் மாத்திரமன்றி இதற்கு அப்பால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் இதனுடன் ஒன்றிணைந்திருக்கிறார்கள் என குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் ஜனாதிபதியுமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாவது நாம் ஒவ்வொரு இடத்திற்கு சென்று அதை இதை பேசாமல் நாம் எம்மை குறை கூறிக்கொள்ளாமல் கிராமத்தில் நாம் அனைவரும் ஒன்றாக இருந்து, தற்பொழுது இரண்டு வருடங்கள் கடந்துள்ள இந்த அரசாங்கத்தினால் செய்த சேவைகளை கதைப்பதற்கு ஏராளமாகவுள்ளது.
இந்த மாவட்டத்தின் தற்போதைய நிலையை அவதானித்தால் இதனை நன்றாக புறிந்து கொள்ள முடியும். இங்கு நாம் ஆயிரக்கணக்கானோருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கினோம். முழு குடும்பத்திற்கும் தொழில்களை வழங்கினோம்.

ஒருவருக்கு தொழில் வழங்காவிட்டால் முழு குடும்பமும் மறு பக்கம் செல்கின்றது. நான் இதனை எழுபதுகளில் இருந்து உணர்ந்து அனுபவித்துள்ளேன். இருந்தாலும் நான் இந்த மாவட்டத்தின் சகல அடிப்படை வசதிகளையும் அரசாங்கம் என்ற வகையில் பெற்றுக் கொடுத்தேன்.

750 ஏக்கரில் கைத்தொழில் பேட்டையொன்றினை அமைத்தேன். நாம் துறைமுகத்தினை பொழுதுபோக்கிற்காக நிர்மாணிக்கவில்லை. பாரியதொரு அபிவிருத்தி திட்டமொன்றினை ஏற்படுத்தி அதனூடாக கூடுதல் இலாபத்தினை ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கும் இந்த பிரதேசங்களுக்கும் பெற்றுக் கொடுப்பதற்கே அமைத்தோம். ஏனென்றால் அதற்கான காணிகள் இங்கு தான் உள்ளது.

இங்கு புதிய தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படும் போது இப்பிரதேசத்தில் இளைஞர் யுவதிகளுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். தென் மாகாணத்திலும் வாய்ப்புகள் அதிகரிக்கும். மொனராகலை மாவட்டத்திலும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இது தான் எங்களது திட்டம்.

இருந்தாலும் அந்த திட்டம் தற்பொழுது வேறுவடிவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் அவை அனைத்தையும் நட்டம் ஏற்படும் நிலைக்கு தள்ளியுள்ளது. ஒருவருக்கும் எவ்வித பிரயோசனமும் அற்றதாக இத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளது.

இங்கு ஒன்றை கூறி வெளிநாடுகளுக்கு சென்று வேறொன்றை கூறி மிக அழகாக சூழ்ச்சிகளை செய்து வருகிறார்கள்.

இந்த சூழச்சிகளின் பலனாக என்ன நடந்தது இந்த நாட்டில் பலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்து முன்னின்றவர்கள் நாம். நாம் சர்வதேசத்தில் முஸ்லிம் மக்களுக்கு அசாதாரணம் நடைபெற்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு எதிராக முஸ்லிம் மக்களுக்கு சார்பாக எழுந்து நின்று குரல் கொடுத்தோம்.

இந்த ஒவ்வொரு சந்தர்பத்திலும் முஸ்லிம்களுடன் நான் இருந்தேன். இன்று அங்கு சென்று பலஸ்தீன மக்களுக்கு எதிராக வாக்களிக்கிறார்கள். அலுத்கமையில் இரு சாராருக்கும் இடையில் ஏற்பட்ட சிறிய பிரச்சினையை ஆட்சி மாற்றத்திற்கு மாத்திரமல்லாமல் எனக்கு விரோதமாக ஒரு அலையை உருவாக்குவதற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு முடியுமாக இருந்தது எனவும் தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-