ஐரோப்பாவில் அண்மையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து புத்தாண்டை முன்னிட்டு நியூயார்க் நகரில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
குறிப்பாக புத்தாண்டுக்கு முதல் நாள், நியூயார்க் 'டைம்ஸ் ஸ்கொயர்' சதுக்கத்தில் நடைபெறவிருக்கும் நடக்கவிருக்கும் கொண்டாட்டத்தில் பல்லா யிரக்கணக்கான மக்கள் திரள்வர் என்பதால் இங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இருபது இலட்சம் மக்களைக் கொண்ட நியூயார்க் நகரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஜெர்மனியிலும் பிரான்சிலும் அணமையில் தீவிரவாதிகள் லோரிகளால் மக்கள் கூட்டத்தில் மோதிக் கொன்ற பயங்கரவாதச் செயல்கள் அமெரிக்காவை பெரிதும் அச்சுறுத்தியுள்ளன.
இதே போன்ற சம்பவங்கள் நியூயார்க்கில் நடக்கக்கூடும் என்பதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இதர சில நகரங்களிலும் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.