அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் அசாதாரணமாகக் கிடைத்த துப்பொன்றினால் ஒரு பெரிய கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இரண்டு அடி நீளமும் இரண்டு அடி அகலமும் உள்ள பெட்டியொன்றில் அடைத்து வளர்க்கப்பட்ட மூன்று வயதுக் குழந்தையை கண்டுபிடித்த பொலிசார் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
சிறையிலிருந்த ஒரு கைதியின் தகவலின் அடிப்படையில் ஒரு வீட்டைச் சோதனையிட்ட பொலிசார் அக் குழந்தை சிறுநீர் நாற்றமடிக்கும் அந்த சிறிய பெட்டிக்குள் பல இறந்த பூச்சிகளிடையே தூங்கிக் கொண்டிருந்திதைக் கண்டுபிடித்தனர்
மேற்படி குழந்தையின் 25 வயதுடைய தந்தை 42 வயதுடைய தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையிலைக்கப்பட்டனர். அவர்களோடு வாழ்ந்து வந்த மேலும் ஏழு பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.