News Update :

Friday, December 30, 2016

TamilLetter

அதிமுக பொதுச்செயலராக சசிகலா நடராஜன் இன்று பதவியேற்பு- எதிர்ப்புகளும் தொடர்கின்றன


அதிமுக பொதுச்செயலராக இன்று சசிகலா நடராஜன் பதவியேற்கவுள்ளநிலையில் இதற்காக அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
நேற்று முன்தினம் நடைபெற்ற அதிமுக்பொதுக்குழுவில் சசிகலா பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார். இதனை சசிகலாவும் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில்  இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலராக பதவியேற்கிறார்.
இதற்கு முன்னதாக  நேற்றையதினம் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் தம்மை பொதுச்செயலராக்கும் பொதுக்குழு தீர்மானத்தை வைத்து சசிகலா ஆசி பெற்றார். 
இதேவேளை அதிமுக பொதுச்செயலராக சசிகலா பதவியேற்க அக்கட்சி தொண்டர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில்  பெரம்பலூரில் சசிகலா கொடும்பாவி எரிக்கப்பட்டு கிளை கழகங்கள் கலைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-