நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களை அடையாளம் கண்டு கொள்வதற்கு இலகுவான புதிய வகை வாகன அடையாள அட்டை ஒன்றை அறிமுகம் செய்ய அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தில் பயணிப்பது, குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்தான் என்பதை அடையாளம் கண்டுகொள்ள முடியுமான வகையில் இந்த அடையாள அட்டை அமையப்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அடையாள அட்டையில் குறித்த நாடாளுமனற உறுப்பினரின் புகைப்படம், அடையாள அரச முத்திரை என்பன இடம்பெறவுள்ளன.
இரவு நேரத்திலும் தெளிவாக இனங்காணக் கூடிய முறையி;ல் இந்த அடையாள அட்டை சிறப்பு வர்ணத்தில் வடிவமைக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணிக்கும்போது மாத்திரமே இந்த அடையாள அட்டைகள் வாகனங்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 2 அடையாள அட்டைகளை வழங்க சபாநாயக்கர் நடவடிக்கை எடுத்துள்ளார். என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.