News Update :

Friday, December 23, 2016

TamilLetter

ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா விவாகரத்து



சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.
ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கும் தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு வெட் எனும் மகன் கடந்தாண்டு பிறந்தார். 
இந்நிலையில் சௌந்தர்யாவுக்கும் அவரின் கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால் சில மாதங்களாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வருவதாகவும் கூறப்பட்டது. இருவரையும் சமாதானம் செய்து மீண்டும் இணைக்க இருவீட்டாரும் முயற்சி செய்து வந்தனர். கோச்சடையான் பட வெளியீட்டின் போது ரஜினிகாந்த் மேடையில் பேசும்போது, மகளின் திரைப்பட வேகம் வியப்பளிப்பதாகவும் அதேநேரத்தில் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தவேண்டும் எனவும் அறிவுரை கூறியது குறிப்பிடத்தக்கது.
எனினும் பிரச்சனை முற்றி, சௌந்தர்யா சென்னை குடும்பநல கோர்ட்டில் இன்று விவாகரத்து மனு தாக்கல் செய்தார். அதேநேரத்தில் அஸ்வினும் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இவர்களின் வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.
தற்போது சௌந்தர்யா, தன் அக்கா ஐஸ்வர்யாவின் கணவரான தனுஷை வைத்து 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.  

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-