News Update :

Wednesday, December 14, 2016

TamilLetter

அன்ஸில் பொத்துவிலுக்கு ஆதரவு நஸீர்,உதுமாலெப்பை யாருக்கு ஆதரவு


சிறாஜ்
இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்யும் தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை(18ம் திகதி) நடைபெறவுள்ளது.

பொத்துவிலைச் சேர்ந்த இம்ரான் எனும் இளைஞர் இத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.பொத்துவில் தொகுதியை சேர்ந்த கழங்கள் நலன் விரும்பிகள் எல்லோரும்; பொத்துவில் பிரதேசத்திற்கே தமது ஆதரவுகளை வழங்கி வரும் நிலையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர்,மாகாண எதிர்க்கட்சி தலைவர் உதுமாலெப்பை ஆகியேரின்; வழிகாட்டலில் தமது உறவினர்களால் செயற்படுத்தப்படும் சில கழங்கள் எந்த பிரதேசத்திற்கு தமது ஆதரவு வழங்கப் போகின்றார்கள் என்பதை பொத்துவில் பிரதேச மக்கள் எதிர் பார்க்கின்றனர்.

பொத்துவில் பிரதேசத்தின் வளர்ச்சியே எமது மூச்சி என்று அடிக்கடி மேடைகளில் கூறிவரும் இவ் இரு அரசியல் வாதிகளின் உண்மையான சுயரூபத்தை இத் தேர்தல் வெளிக்காட்ட உள்ளது 

இதுவரையும் பொத்துவில் மக்களால் வாக்களிக்காத அட்டாளைச்சேனைiயின் முன்னாள் பிரதேச சபைத் தலைவர் எம்.ஏ.அன்ஸில் பொத்துவில் இம்ரானை ஆதரிக்க முடிவு செய்து அதற்கான வேலைத் திட்டத்திலும் இறங்கியுள்ளார்.

கிpழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர்,மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை ஆகியோர் பொத்துவில் பிரதேசத்திற்கு ஆதரவு தெரிவித்து அதற்காக உழைப்பார்களா?





;

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-