News Update :

Thursday, December 15, 2016

TamilLetter

அட்டாளைச்சேனைக்கு ஆப்பு வைத்தார் ரவூப் ஹக்கீம்


சிறாஜ் அகமட்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைத்த இரண்டு தேசியப் பட்டியல் உறுப்புறுமையை தனது சகோதரனுக்கும் தனது நண்பனுக்கும் வழங்கி அழகு பார்த்தார் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்.

கட்சி தோல்வியடைந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த திருகோணமலை மாவட்டத்தில் அமைச்சர் ரிஷாட்டின் மக்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை உணர்ந்த ஹக்கீம் தவிர்க்க முடியாமல் தனது சகோதரர் வகித்து வந்த பதவியை திருகோணமலைக்கு வழங்கினார்.

இன்று தன் நண்பனுக்கு வழங்கிய மற்றுமொறு தேசியப்பட்டியலை ஹஸனலிக்கு வழங்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சுமார் 30 வருடங்களாக தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் அட்டாளைச்சேனை பிரதேசம் மீண்டும் ஹக்கீமின் சதித் திட்டத்தால் இன்று பறிபோய்யுளளது.

ஓவ்வொறு தேர்தல்களிலும் நாக்கு கூசாமல் அட்டாளைச்சேனைக்கு இம் முறை எம்.பி என மேடைகளில் சத்தியம் செய்து விட்டு தேர்தல் முடிந்ததும் சத்தியத்தை மறந்த வராலாறுகள் ஏராளாம்.

இன்று ஹஸனலியினால் தம் தலைமைக்கே ஆபத்து வந்து விட்டது எனவே  என்ன விலை கொடுத்தாவது  ஹஸனலியை சமாளிப்பதற்கு ரவூப் ஹக்கீம் தீர்மானித்துள்ளார்.

புிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலைக்கு தள்ளப்பட்ட ஹக்கீம் எம்.பி பதவியை எடுக்குமாறு ஹஸனலியின் வீட்டு படிக்கட்டில் மணிக் கணக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

50 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு சுமார் 30 வருடத்திற்கு முன்பே வழங்க வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்காமல் ஓரு தனிமனிதனை திருப்திபடுத்துவதுடன் தனது தலைமைப் பதவியையும் தக்க வைக்கலாம் என கருதுகிறார்.

எனவே எம்.பி என்பது அட்டாளைச்சேனையின் பகல் கனவாகிப் போய் விட்டது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-