News Update :

Monday, December 12, 2016

TamilLetter

ஹஸனலியின் வீட்டில் இன்று ஹக்கிமுக்கு எதிரான தீர்மானங்கள்

நேரடி ரிப்போட்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டம் எதிர்வரும் 14ம் திகதி நடைபெற உள்ளதால் அக் கூட்டத்தில் முக்கிய பல தீர்மானங்கள் மேற் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவரால் அழைப்பு விடுக்கப்பட்ட உயர்பீட கூட்டத்திற்கு முன்பதாக கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹஸனலி அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் உயர்பீட உறுப்பினர்களை தனது வீட்டுக்கு அழைத்து ஒரு கலந்துரையாடலை இன்று மாலை(12) நடாத்தினார்.

இக் கூட்டத்திற்கு பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மர்சூக்,; உதவித் தவிசாளர் எம்.ஏ.தாஜ்சுதீன், ஹனிபா மதனி,அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான நஸீர்,முனாப்,தவிசாளர் அன்ஸில்,நிந்தவூர் முன்னாள் தவிசாளர் தாஹீர் என ஏகப்பட்ட உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இதன் போது கூட்டத்தின் நோக்கம் பற்றி செயலாளர் ஹஸனலி; உரையாற்றினார்.தான் ஆரம்ப கால போராளியாக இருந்த போதும் கட்சியின் தலைமையின் தனிப்பட்ட சுயநலத்திற்காக தன்னை கட்சியிலிருந்து நீக்குவதற்காக எதிர்வரும 14ம் திகதி நடைபெறவுள்ள உயர்பீட கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ள தலைவர் இரகசிய திட்டம் தீட்டியுள்ளதாக தெரிவித்தார்.அத்தோடு மஹிந்தவோடு தலைவருக்கு இருந்த உறவு பற்றியும்,மாகாண சபை தேர்தலில் தலைவர் நடந்து கொண்ட விதம் பற்றியும்,18வது திருத்த சட்டத்திற்கு உடன்பட்ட விடயம் தொடர்பாகவும்,திவிநெகும சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியமை தொடர்பாகவும்,கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஹக்கீம் எடுத்த முடிவு தொடர்பாகவும்,பஷில் ராஜபக்ஸவோடு ஒப்பந்தம் செய்வதற்கு உடன்பட்ட விடயம் தொடர்பாகவும்,இறுதியில் தபால் வாக்களிப்பிற்கு பிற்பாடு ஒடிவந்த விடயம் தொடர்பாகவும் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்த கருத்து தெரிவித்த அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.நஸீர் ஹஸனலி நமது மண்ணையும் மக்களையும் நேசிக்கிறார்.கட்சித் தலைவர் பணத்தையும் பதவியையும் நேசிக்கிறார்.கோடிக் கணக்கில் வெளிநாட்டு பணங்கள் அவரிடம் வந்து சேர்கின்றது.அரசியல் அறிவில்லாத குடிகாரர்களுக்கு பதவிகளை வழங்கி சமூகத்தை சீர்யழிக்கின்றார். பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி ஏமாற்றுகின்றார். எமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தனது சகோதரனுக்கு வழங்கிய கேவலம் கெட்ட தலைமையாக நமது கட்சியின் தலைமை உள்ளது. எனவே  ;ஹஸனலியின் பதவியை பறிக்க முற்பட்டால் பல விளைவுகளை தலைவர் எதிர் நோக்க வேண்டி வரும் என்றார்.

மற்றுமொறு அட்டாளைச்சேனை பிரதேச சபையின உறுப்பினர் ஓல்.டி.முனாப் ஹஸனலி ஒர் நேர்மையான அரசியல்வாதி.அறிவு சார்ந்தவர் கட்சியின் தலைமை மிகவும் மோசமாக நடந்து கொண்டுள்ளது எனவே ஹஸனலி தொடர்ந்தும் கட்சியின் செயலாளராக இருக்க வேண்டும் அதற்காக நாங்கள் எது வேண்டுமென்றாலும் செய்வோம் என்றார்.

முன்னாள் தவிசாளர் அன்ஸில் பேசும் போது நான் ஹஸனலி எனும் தனிநபருக்காக இங்கு வரவில்லை அவர் இன்றும் நம் கட்சியின் செயலாளர் கட்சியின் செயலாளர் என்னை கூட்டத்திற்கு அழைத்தார் நான் வந்தேன். அவரின் தனிப்பட்ட பதவிக்காக நான் ஆதரவு வழங்க மாட்டேன்.ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஹஸனலி எனும் ஆளுiமான திறமையான மனிதர்; நம் கட்சிக்குள் அவசியம் என்பதனால்தான் அவருடைய பதவியை மீள வழங்க வேண்டும் என்று கூறுகிறேன் என்றார்.

இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைமைக்கு எதிராக பல பேர் கருத்துக்களை தெரிவித்தனர்.டயஸ் போராவிடம் பணம் பெற்றது.அட்டாளைச்சேனைக்கு வழங்க வேண்டிய தேசியப் பட்டியலை தனது சகாக்களுக்கு வழங்கியது,கிழக்கு மாகாணத்தை வடக்கோடு இணைப்பதற்கு ரகசியமாக செயற்படுவது என ஏராளமான குற்றச் சாட்டுக்களும் தலைவர் மீது கண்டனக் சொற்களும் பறந்தன. 

இக் கூட்டத்தில் பல முக்கிய கட்சி போராளிகளால் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டு உள்ளதால்  கட்சியின் தலைமையின் எதிர் காலம் கேள்விக் குறியாக மாறலாம்.


;

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-