News Update :

Wednesday, December 14, 2016

TamilLetter

முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் ஹஸனலி பற்றிய உண்மை


கொழும்பு நிருபர்

நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டம் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்றிரவு கட்சியின் தலைமையகமான தாறுஸலாமில் இடம் பெற்றது.

சமகாலத்தில் நாட்டில் நடைபெற்று வரும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டாலும் கட்சியின் செயலாளர்களில் ஒருத்தராக இருந்து வரும் ஹஸனலி தொடர்பாகவே பேசுவதற்கு அதிகமான உயர்பீட உறுப்பினர்கள் ஆர்வம் கொண்டதனால்; செயலாளர் ஹஸனலி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டு அவர் தொடர்பான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

ஹஸனலியை அவர் வகித்த பதவியிலிருந்து விலக்குவதற்கே தீர்மானம் மேற்கொள்ள வேண்டுமென அதிகமான உயர்பீட உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஹஸனலி எனும் செயலாளர் தலைமையோடு முரண்பட்டிருந்தால் பேச்சு வார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கலாம் ஆனால் கட்சிக்கு எதிரானவர்களில் நிழலில் நின்று கொண்டு தலைமையை விமர்சிப்பதால்; சுமுகமான பேச்சுவார்த்தைகளில்; ஈடுபடுவது அவ்வளவு ஆரோக்கியமானதாக அமையாது என சொல்லப்பட்டது.

பேராளர் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்ட மற்றும் கட்சியின் யாப்பில் உள்ளடக்கப்பட்ட செயலாளர் பதவியை உயர்பீட கூட்டத்தில் மாற்ற முடியாது எனவே கட்சியின் செயலாளராக மன்சுர்10 ஏ.காதர் தொடர்ந்தும் செயலாற்றுவார்.

நான் நீதிமன்றம் செல்ல மாட்டேன் என கூறும் ஹஸனலி எதற்காக தேர்தல் ஆணையாளரிடம் சென்று முறையிட்டது அப்படி முறையிட்டதன் மூலம் அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார் என்பது தெட்ட தெளிவாகவுள்ளது.

மேலும் ஹஸனலி நேரடியாக நீதிமன்றம் செல்லாமல் தன் பின்னால் நிற்கும் துரோகிகளை வைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவது தொடர்பான ஆதராங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும்  ஒரு உறுப்பினர் தெரிவித்தார்..

தன் மகனையும் சேகு இஸ்ஸதினின் மகனையும் கொண்டு கிழக்கின் எழுச்சி கோசத்தை ஏற்படுத்தி கட்சிக்கு எதிரான போராட்டத்தை அப்பவே ஆரம்பித்தார்.

இதில் ஒரு அங்கமாக மூன்று தினங்களுக்கு முன்பு ஹஸனலியின் வீட்டிவ் நடைபெற்ற கூட்டத்திற்கு ஹஸனலியே தன்னை அழைத்ததாக் சாய்ந்தமருது அமைப்பாளர் பிர்தௌஸ் கூட்டத்தில் தெரிவித்தார்.

எனவே ஹஸனலி வகிக்கும் அணைத்து பதவிகளையும் அவரிடமிருந்து களைய வேண்டுமென உயர்பீட உறுப்பினர்கள் தலைவரை கேட்டுக் கொண்டனர்.

ஹஸனலியின் செயற்பாட்டால் அதிர்ப்தியுற்ற கட்சியின் தலைமை கருத்து தெரிவிக்கும் போது நான் ஹஸனலியோடு பெசுவதற்கு தயாராகவே உள்ளேன் ஆனால் அவரைப்பற்றிய நம்பிக்கை இன்னும் எனக்கு வரவில்லை எனவே அடுத்த வாரம் நடைபெறும் உயர்பீட கூட்டத்தில் மீண்டும் பேசுவோம் என்றார். 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-