News Update :

Tuesday, December 13, 2016

TamilLetter

முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் பிரச்சினைக்கு தீர்வு


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் விசேட அரசியல் உயர்பீடக் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பொது செயலாளர் ஹசன் அலி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.. கட்சி ஒன்றில் பொதுசெயலாளர் ஒருவரும், செயலாளர் ஒருவருமாக இரண்டு பேர் இருக்க முடியாது என அவர் தெரிவித்தார்.
ஒரு செயலாளரை அறிவிக்குமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய முஸ்லிம் காங்கிரஸுக்கு அண்மையில் உத்தியோகபூர்மாக அறிவித்து காலக்கெடு ஒன்றையும் விதித்திருந்தார்.
இதன்படி நாளையதினம் தேர்தல்கள் ஆணையாளருக்கு இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸினால் அறிவிக்கப்பட வேண்டும்.  இந்த நிலையில் இன்றைய கூட்டத்தின் போது பொது செயலாளர் அல்லது செயலாளர் குறித்து தீர்மானிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
இதே வேளை கட்சிக்கு ஒரு செயலாளர்தான் நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டால் ஹஸனலி வகித்த செயலாளர் பதவியை இரத்து செய்வதற்கு கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் தமக்கு விசுவாசமுள்ள உயர்பீட உறுப்பினர்களோடு கலந்துரையாடியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹஸனலியை உடனடியாக வெளியில் போடுவதால் கட்சிக்குள் ஏற்படும் முரண்பாடுகள் மற்றும் ஹஸனலிக்கு ஆதரவாக செயற்படும் நபர்கள் யார் என்பது தொடர்பான தகவல்களையும்; தலைவர் திரட்டியுள்ளதாக கூறப்படுகின்றது 
ஹஸனலியின் ஆதரவு தளத்தை வைத்துத்தான் இன்றைய கூட்டத்தின் முடிவுகள் தீர்மானிக்கப்படும் 

,

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-