News Update :

Wednesday, December 7, 2016

TamilLetter

ஹக்கீம் ஹஸனலி உறவு-சாட்சி சொல்லும் வீடியோ



ஹஸன் அன்வர்



கட்சியின்_இந்த_நிலைக்கு_காரணம்_ஹக்கீமா_ஹசனலியா_என்பதை_ஹக்கீமிடம்_இருக்கும்_வீடியோவை_வெளியிட்டு_கட்சிப்போரளிகளுக்கு_தெளிவுபடுத்துவது_ஹக்கீமின்_கடமையே....!
வீடியோவை_வெளியிடாதுவிட்டால்_ஹசனலிக்கு_துரோகமிழைத்தது_ஹக்கீமே. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு செயலாளர் ஒருவரே இருக்க முடியும் என்பதால் அந்த செயலாளர் யார் என்பதை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்பதாக, தனக்கு அறிவிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் எழுத்துமூலமாக கோரியுள்ளமை பற்றி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரியப்படுத்தியிருந்தேன்.
அதன்படி எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்பாக இப்பிரச்சினையை தீர்ப்பதற்கான எந்த முயற்சியும் ரவூப் ஹக்கீம் தரப்பால் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இதேவேளை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கடிதத்தில் குறிப்பிட்டபடி, தேர்தல் ஆணையகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் கட்சியின் செயலாளராக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த மன்சூர் ஏ காதரின் பெயர் நீக்கப்பட்டு செயலாளர் பதவி பிணக்கிலுள்ளதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலை ஏற்பட காரணம், தேர்தல் ஆணையகத்துக்கு செயலாளர் பதவி தொடர்பில் ஹசனலி வழங்கிய முறைப்பாடேயாகும். ஆக, ஹசனலியின் செயற்பாட்டால் இன்று கட்சி தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று ஹக்கீம் ஆதரவாளர்களால் ஹசனலி மீது குற்றஞ்ச்சாட்டப்படுகிறது.
அதேவேளை சிலருக்கு பதவிகள் வழங்கி அவர்களை திருப்திப்படுத்தவும், உயர்பீடக் கூட்டத்தின் குறிப்பெடுக்கவும் என்றே புதிய உயர்பீடச் செயலாளர் ஒருவர் உள்ளிட்ட ஐந்து செயலாளர்கள் நியமிக்கப்பட்டதாகவும், பின்னர் உயர்பீடச் செயலாளராக நியமிக்கப்பட்டவரை வஞ்சகமாக கட்சியின் செயலாளர் என ஹக்கீம் அறிவித்ததாகவும் ஹசனலி தரப்பு ஹக்கீம் மீது குற்றஞ்சாட்டுகிறது. கடந்த 2012 மாகாண சபைத் தேர்தலில் மஹிந்தவுடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதை தடுத்து மரத்தில் தனித்துவமாக போட்டியிட தான் வழங்கிய அழுத்தம் காரணமாகவே தனக்கும் ஹக்கீமுக்கும் முரண்பாடு தோன்றியதாக ஹசனலி குறிப்பிடுகிறார்.
இறுதியாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவை ஆதரிக்க முடிவெடுத்து பணப்பரிமாற்றமும் நடைபெற்றபின், தான் எடுத்த நிலைப்பாடு காரணமாக மைத்திரியை ஆதரிக்கும் முடிவுக்கு ஹக்கீம் வரவேண்டியிருந்ததனால் இம்முரண்பாடு உச்சத்தை அடைந்ததனாலேயே, நான் தேர்தலில் போட்டியிடுவதையும் தடுத்து, நான் வகித்த செயலாளர் பதவியையும் வஞ்சகமாக பறித்துக்கொள்ள காரணம் என ஹசனலி கூறுகிறார்.
நான் பாராளுமன்றத்திலோ, கட்சியின் செயலாளராகவோ இருந்தால், இக்கட்சியை வைத்து பணம் சம்பாதிக்கும் ஹக்கீமின் நடவடிக்கைக்கு நான் தடையாக இருப்பேன் என்பதாலேயே, திட்டமிட்டு என்னை பழிவான்கியதாக ஹசனலி குறிப்பிடுகிறார். இவர்கள் இருதரப்பில் யார் கூறுவது உண்மை?
கட்சி நமது உரிமைகளுக்காக போராடும் என நம்பி கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்த போராளிகள் யாரை நம்புவது...? உண்மையாக, செயலாளரைத் தெரிவுசெய்த கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை அறிய உள்ள ஒரே மறுக்கமுடியாத ஆதாரம் ரவூப் ஹக்கீமின் ஊடகப் பிரிவிடம் உள்ள வீடியோதான். வழமைக்கு மாறாக கடந்த 2015.11.06ஆம் திகதி இரவு நடந்த அக்கூட்டம் ஹக்கீமின் ஊடகப்பிரிவினால் முழுமையாக ஒலி ஒளிப்பதிவு செய்யப்பட்டது. ஆக, அந்த வீடியோவை வெளியிட்டால் கட்சியின் இன்றைய இந்த நிலைக்கு யார் காரணம் என்பது வெளிப்பட்டுவிடும். தான் குற்றமற்றவர் எனில் ஹக்கீம் அந்த வீடியோவை வெளியிடுவார்தானே. அவ்வாறு வெளியிடாதுவிட்டால் குற்றம் ஹக்கீமின் பக்கமென்றே நாம் ஊகிக்கலாம்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-