மட்டக்களப்பு- பாசிக்குடா கரையில் இருந்து சுமார் 12 கிலோமீற்றர் தூரத்தில், மர்மப்பொருள் ஒன்று கடலில் மூழ்கிக்கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு மூழ்கிக்கொண்டிருக்கும் மர்மப்பொருள், கப்பலாக இருக்கலாம் அல்லது விமானத்திலிருந்து கடலில் விழுந்த ஒரு பகுதியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
எனினும் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.