News Update :

Saturday, December 17, 2016

TamilLetter

95 வருடங்களாகப் புகைப்பிடிக்கும் 112 வயது மூதாட்டி



அப்பப்போ தண்ணி அடிச்சாலும் பரவாயில்ல. புகைப்பிடிக்காதே.உடல் நலத்திற்கு கேடு ' என்பதே புகைப்பிடிப்பவர்களுக்கு நம்மில் பலர் கூறும் அறிவுரையாக இருக்கிறது.  புகைப்பிடிக்கும்  பழக்கத்திற்கு எதிராக உலகம் முழுக்க பல்வேறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நாம் அறிவோம்.  ஆனால், நேபாளில் உள்ள  பாத்துளி லாமிச்சான் எனும் மூதாட்டி, தம் மீது அக்கறை கொண்டவர்களின் பாசமான அறிவுரைகளையும் மீறி புகைப்பிடித்து வருகிறார்,  95 வருடங்களாக. 
ஒரு நாளைக்கு 30 சிகரெட்டுகளை அசால்ட்டாக ஊதித்தள்ளும் இந்த மூதாட்டி, தமது நீண்ட ஆயுளுக்கு,  தமது இந்த புகைப்பிடிக்கும் பழக்கமே காரணம் எனக் கூறும்  பாத்துளிக்கு  வயது 112.  
தமது 17-ஆவது வயது முதல், பாத்துளி  புகைப்பிடிக்கும் பிடிக்கும் பழக்கத்தைத் தொடங்கியுள்ளார். இது குறித்து கேட்டால், அவர் என்ன சொல்கிறார் தெரியுமா?: 
'இப்போதுள்ள இளைஞர்கள் அதிகமான அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். எனவே, சுறுசுறுப்பாகவும், மன அழுத்தத்திலிருந்தும் விடுபடவேண்டுமென்றால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அப்போதுதான் நீண்ட ஆயுளுடன் இருக்க முடியும் ' என்கிறார்.
இதன் மூலம் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில் பாத்துளி, நாமெல்லாம் சந்தையில் பார்க்கும்  சிகரெட்டைப் புகைப்பதில்லை.  மாறாக, சொந்தமாக தயாரிக்கும்  சிகரெட்டுகளையே புகைக்கிறார்.    
வேலையின்றி, யாருடைய துணையுமின்றி, ஓர்  இந்து கோயிலின் உதவியோடு வாழ்ந்து வருகிறார் பாத்துளி. 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-