News Update :

Saturday, December 10, 2016

TamilLetter

73 வயதில் கபொத சாதாரண தர பரீட்சையில் தோற்றிய பெண்!



தற்போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில், 73 வயதான பெண் ஒருவரும் தோற்றியுள்ளார். மாத்தறை நாதுகல பிரதேசத்தை சேர்ந்த என்.என்.எஸ். கல்யாணி என்ற 73 வயதான பெண் சாதார தரப்பரீட்சையில் தகவல் தொழிநுட்ப பாடத்திற்கான பரீட்சையில் தோற்றினார். மாத்தறை இல்மா கல்லூரியின் பரீட்சை மண்டபத்தில் அவர் பரீட்சைக்கு தோற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள கல்யாணி, காலத்திற்கு ஏற்ப புதிய தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொள்வது தனது நோக்கம் எனக் கூறியுள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-