News Update :

Friday, December 30, 2016

TamilLetter

அமெரிக்கா – ரஷிய உச்ச முறுகல்!! 72 மணி நேரம் காலக்கெடு -



அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா ‘ஹேங்கிங்’ நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பாக நடவடிக்கையை தொடங்கி உள்ள அமெரிக்கா முதல்கட்டமாக 35 ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டு உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்க அரசியல் கட்சிகளின் இணையதளம் மற்றும் இ-மெயில்களை ஹேங்கிங் செய்து, தேர்தலில் தலையிட்டது தொடர்பாக ரஷிய அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு தடை விதித்து பாரக் ஒபாமா நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டு உள்ளார்.

அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் சபை வாக்குகளை அதிகமாக பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மக்கள் வாக்குகளை அதிகளவில் பெற்றாலும் தேர்தல் சபை வாக்குகளை குறைவாக பெற்றதால் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் டிரம்பை வெற்றி பெறச்செய்ததில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டியது.

குறிப்பாக, ‘ரஷிய அரசுடன் தொடர்புடைய தனி நபர்கள், ஹிலாரியின் ஜனநாயக கட்சி தேசிய குழு மற்றும் ஹிலாரி பிரசார குழு தலைவர் பிரசாரம் தொடர்பான ஆயிரக்கணக்கான இ–மெயில்களை இணையதளத்தில் திருட்டுத்தனமாக புகுந்து திருடி, விக்கி லீக்ஸ் இணையதளத்தின் மூலம் கசிய விட்டனர். ஹிலாரி தோற்பதற்காகவும், டிரம்ப் வெற்றி பெறுவதற்காகவும் இதை செய்துள்ளனர்’ என குற்றம் சாட்டியது. வெள்ளை மாளிகையும், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலையொட்டி இணையதளத்தில் சட்டவிரோதமாக புகுந்து நடத்தப்பட்ட தாக்குதலில் (திருட்டில்) ரஷிய அதிபர் புதினுக்கு தொடர்பு உண்டு என குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சாட்டினார்.

இதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டதாக கூறப்படும் ரஷியா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஒபாமா அறிவித்தார். இப்போது தேர்தலில் தலையிட்டது தொடர்பாக ரஷிய அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு தடை விதித்து பாரக் ஒபாமா நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டு உள்ளார். வாஷிங்டன் மற்றும் சான் பிரான்ஸிகோவில் உள்ள ரஷிய தூதரகங்களில் பணியாற்றிய ரஷியாவை சேர்ந்த தூதரக அதிகாரிகள் 35 பேரை வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது. குடும்பத்துடன் அமெரிக்காவை விட்டு வெளியேற மொத்தம் 72 மணிநேரம் அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.

ரஷியாவிற்கு எதிராக அதிரடி தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள அதிபர் ஒபாமா திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவின் மேரிலாந்து மற்றும் நியூயார்க்கில் உள்ள ரஷிய அரசாங்கத்திற்கு சொந்தமான வளாகங்களை ரஷியர்கள் இனி பயன்படுத்த முடியாது என்றும் ஒபாமா கூறிஉள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு உள்ளது என ஒபாமா நிர்வாகம் குற்றம் சாட்டிவந்தாலும் ரஷியா அதனை மறுத்து வருகிறது.

இதற்கிடையே அமெரிக்காவின் தடை விதிப்பு நடவடிக்கைக்கு பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிஉள்ள ரஷியா, அமெரிக்கா இருதரப்பு உறவை அழிக்கும் விதமாக உண்மையில்லாத குற்றச்சாட்டை சுமத்துகிறது என்று கூறிஉள்ளது.
-

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-