இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிக்காத இராட்சத குண்டை செயலிழக்க வைப்பதற்காக ஜேர்மனியின் அவுஸ்பர்க் நகரில் இருந்து சுமார் 50,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
சுமார் 1800 கிலோ எடையுள்ள அந்த இராட்சத குண்டு 1944 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்து படைகளால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
கடந்த 1944 ஆம் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின்போது இந்த பகுதியின் மீது நடத்தப்பட்ட விமான தாக்குதலில் அவுஸ்பர்க் நகரமே நிர்மூலமாகிப் போனது.
பின்னர், மெல்ல,மெல்ல மீண்டும் கட்டமைக்கப்பட்ட இந்த நகரத்தில் இவ்வளவு பெரிய வெடிகுண்டு கிடைத்த தகவல் அந்த நகர மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கட்டுமானப் பணிக்காக அவுஸ்பர்க் நகரில் சமீபத்தில் பள்ளம் தோண்டியபோது அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த வெடிகுண்டு கிடைத்துள்ளது.
இந்த வெடிகுண்டை வெற்றுத் திடலில் வைத்து பாதுகாப்பான முறையில் இன்று (25) செயலிழக்க வைக்க நிபுணர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியையொட்டி சுமார் ஒன்றரை கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் அனைவரையும் தங்களது வீடுகளில் இருந்து தற்காலிகமாக வெளியேறுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதன் எதிரொலியாக அங்குள்ள சுமார் 50,000 மக்கள் தங்களது வீடுகளை விட்டு, வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அவசர வெளியேற்றத்தால் இன்று கொண்டாட வேண்டிய கிறிஸ்துமஸ் பண்டிகையை நேற்றே விமர்சையாக விருந்துடன் அவுஸ்பர்க் நகர மக்கள் கொண்டாடி முடித்தனர்.