News Update :

Saturday, December 31, 2016

TamilLetter

'கிறிஸ்துமஸ் தாத்தா' போலவந்த பயங்கரவாதி; துருக்கியில் 35 பேர் படுகொலை!




புத்தாண்டை கொண்டாவதற்காக இங்குள்ள இரவு கேளிக்கை விடுதி ஒன்றில் குவிந்திருந்த மக்களின் மீது கிறிஸ்துமஸ் தாத்தா உடையில் இருந்த ஒருவன் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 35 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 40-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
முதல்நாள் இரவு புத்தாண்டைக் கொண்டாட்டத்துடன் வரவேற்க ரெய்னா என்ற அந்தக் கேளிக்கை விடுதியில் பலரும் திரண்டிருந்தனர். அப்போது கிறிஸ்துமஸ் தாத்தா போல உடை அணிந்திருந்த ஒரு நபர் துப்பாக்கியால் சரமாரியாக அவர்களைச் சுடத்தொடங்கினான். குண்டுமழை பொழிந்ததில் மக்கள் அங்கே அலறித் துடித்தவாறு கீழே சாய்ந்தனர். 
கிட்டத்தட்ட 700க்கும் அதிகமானோர் அங்கே இருந்ததால் துப்பாக்கி திரும்பிய திசைகளில் எல்லாம் மக்கள் சுருண்டு விழநேர்ந்தது.
இதுவொரு பயங்கரவாதத் தாக்குதல் என்றும் அப்பாவி மக்கள் ஈவு இரக்கமின்றி சுட்டுத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் இஸ்தான்புல் நகர மேயர் வாசிப் சாஹின் தெரிவித்தார். ஆற்றை ஒட்டி இருந்த இந்த விடுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின்போது சிலர் ஆற்றில் குதித்து தப்பியுள்ளனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-