News Update :

Thursday, December 29, 2016

TamilLetter

3 லட்சம் பேரை பலிகொண்ட சிரியா உள்நாட்டுப் போர்



கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து சிரியா அதிபர் பாஷர் அல் அசாத் அரசுப் படைகளுக்கும் அவரது அரசை வீழ்த்த முனைந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே நடந்து வந்த போரில் 3 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், முதன் முறையாக நாடு தழுவிய அளவில் போர் நிறுத்தம் அமல்படுத்தப் பட்டுள்ளது.
சிரியா, ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையேயான உடன்பாட்டின் அடிப்படையில் இந்தப் போர்நிறுத்தம் அமலாகி யுள்ளது. போர்நிறுத்தக் கண்காணிப்பை ரஷ்யாவும் துருக்கியும் மேற்கொள்ளவுள்ளன.
சிரியாவின் அரசுத் தரப்பும் கிளர்ச்சிப் போரில் ஈடுபட்டுள்ள பல்வேறு படை அணிகளும் இந்த உடன்பாட்டில் சம்பந்தப்பட்டுள்ளன என்றாலும் கிளர்ச்சித் தரப்பைச் சேர்ந்த ஐஎஸ் படைப் பிரிவு மற்றும் குருதிஷ்தானிய படை ஆகியவை இந்த உடன்பாட்டில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போர்நிறுத்தம் அமலுக்கு வந்த சில மணிநேரங்கள் வரை சிரியா முழுவதும் சண்டை எதுவும் நடக்கவில்லை. இந்தப் போர்நிறுத்தம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டால், பின்னர் கசகஸ்தானில் சிரியா மீதான நிரந்தர அமைதிக்கானப் பேச்சுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-