News Update :

Tuesday, December 13, 2016

TamilLetter

28 எம்.பிக்கள் மஹிந்த பக்கம் இணைவு




நாட்டை பிரிக்கும் சமஷ்டி யாப்பினை தோற்கடிக்க ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாட்டை நேசிக்கும் பலர் தம்முடன் இணைந்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்

எங்களிடம் 51 பேர் இருக்கின்றனர். இந்த யாப்பினை தடுப்பதற்கு 76 வாக்குகள் தேவை, ஆகவே மேலதிகமாக 25 பேரின் அதரவு எமக்குத் தேவை, ஜே.வி.பியின் நிலைப்பாடு குழப்பமாகவே காணப்படுகின்றது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக வந்த 13ஆவது திருத்தத்திற்கு எதிராக குரல் எழுப்புவதற்கு பல உயிர்களை பலிகொடுக்க வேண்டி ஏற்பட்டது.


13ஆவது திருத்தத்தையும் மீறி அதிகாரத்தை பகிர்வதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜே.வி.பியின் அரசியல் வரலாற்றை நோக்குமிடத்து அன்றைய தினத்தை விடவும் இன்று அவர்கள் இதற்கு தமது எதிர்ப்பை வெளியிட வேண்டும். அதனை விடவும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சியில் உள்ள கட்சியை விடவும் நாட்டை நேசிக்கின்ற 28 பேர் புதிய யாப்பிற்கு எதிராக வாக்களிக்க எமக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். எனினும் இறுதி நேரத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.

28 பேரை நாங்கள் 35 பேராக அதிகரித்துக்கொள்ள எதிர்ப்பார்க்கின்றோம். ஆகவே சர்வஜன வாக்கெடுப்பின்றி, நாடாளுமன்றில் நிறைவேற்றி இந்த நாட்டை 9 பிரிவுகளாக பிரிக்கும் சமஷ்டி யாப்பினை தோல்வியடையச் செய்ய நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகளிமிருந்து ஆதரவு கிடைக்குமென நாம் நம்புகின்றோம்.” என்றார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-