7 குற்ற செயல்களுக்கு தீர்மானிக்கப்பட்ட 25,000 ரூபாய் தண்டப்பணத்தில் எவ்வித மாற்றமும் செய்யாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.அதற்கமைய குறித்த 7 குற்றச்சாட்டுகளுக்கும் சட்டத்தை செற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுதல், சாரதி அனுமதி பத்திரம் இன்றி வாகனம் ஓட்டுதல், இடது பக்கதால் முன் செல்தல், காப்புறுதி இல்லாமை, பாதுகாப்பற்ற ரயில் பாதைகளில் சட்டத்தை மீறுதல், சாரதி அனுமதி பத்திரம் இல்லாத ஒருவருக்கு வாகனத்தை ஓட்டுவதற்கு இடமளித்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு தண்டப்பணம் அறவிடப்படவுள்ளது.