News Update :

Wednesday, December 14, 2016

TamilLetter

2017-ஆம் ஆண்டு ஆஸ்கர்: ஏ.ஆர் ரஹ்மான் மீண்டும்



எதிர்வரும் 2017-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு, ஏர்.ஆர் ரஹ்மான்  பெயர் மீண்டும் பரிந்துரைக்கப்பட்டது.  
இதற்கு முன்னர் ஸ்லம்டாக்   மில்லியனேர்  படத்துக்கு இசையமைத்ததற்காகக் கடந்த 2009-ஆம் ஆண்டு இரண்டு ஆஸ்கர் விருது பெற்றுள்ள நிலையில்  தற்போது மீண்டும் ஏ.ஆர் ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. 
பிரேசில்,  நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் பீலே-வின் வரலாறை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஜிங்கா என்ற ஹாலிவுட் படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் ஏர்.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். 
இப்படத்தின் பாடல்கள் புகழ்ப்பெற்றுள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்கான  ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் இந்த படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரகுமானின் இரு பிரிவுகளின்கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  படத்தின் பின்னணி இசை, பாடல்களுக்கான இசையமைப்பு ஆகிய இரண்டு பிரிவுகளில் இவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. படங்களில் இடம்பெற்ற தனிப்பாடல்களுக்கான பிரிவில் ரஹ்மானின் பாடல்களுடன் சுமார் 140 பாடல்கள் மோதுகின்றன.
ஏற்கனவே ஸ்லம்டாக் மில்லியனேர் படத்துக்கு இசையமைத்ததற்காக கடந்த 2009-ம் ஆண்டு சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடலுக்கான இசை என்று ஒரே மேடையில் இரு ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியர்களுக்குப் பெருமை சேர்த்த ஏ.ஆர்  ரஹ்மான் வரும் ஆண்டும் ஆஸ்கர் விருதை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-