News Update :

Friday, December 23, 2016

TamilLetter

கடும் மழை: 20,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின!


இந்தோனிசியாவின் நுசா தெங்காரா மாநிலத்தில் இடைவிடாது பெய்த மழை காரணமாக அம்மாநிலம் வெள்ளக்காடானது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். மாநிலத்தின் முக்கிய விமானநிலையம் மூடப்பட்டது.
சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன என்று தேசிய பேரிடர் துயர்துடைப்பு ஆணையம் தெரிவித்தது. அனைத்துத் தொலைத் தொடர்புகளும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இங்கு அவசர காலப் பிரகடனம் செய்யப்பட்டு, துயர்துடைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து வெள்ளம் பெருகுவதாலும் மழை விடாது பெய்வதாலும் பாதிப்புற்றோர் எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இராணுவம் மற்றும் போலீஸ் படையினர் முழுவீச்சில் துயர்துடைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-