News Update :

Tuesday, November 22, 2016

TamilLetter

ஐஎஸ் சதி: ஐரோப்பா தாக்கப்படும்! அமெரிக்கா கடும் எச்சரிக்கை!



ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கர்கள் அடுத்தடுத்த வாரங்களில் பொது இடங்களில் கூடும்போது மிகக் கவனமாக, பாதுகாப்பு விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
ஐஎஸ் தீவிரவாதிகளின் பயங்கரவாதச் சதி ஒன்றை நேற்று பிரெஞ்சு அரசாங்கம், முறியடித்திருப்பதைத் தொடர்ந்து அமெரிக்கா இந்த எச்சரிக்கை யை விடுத்திருக்கிறது.
அடுத்த ஓரிரு வாரங்களில் ஐரோப்பாவில் ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் நடக்கக்கூடிய சாத்தியம் இருப்பதால் அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று அது கேட்டுக்கொண்டது.  
பிரான்சுத் சதித்திட்டம் தொடர்பாக அந்நாட்டுப் போலீசார் எழுவரைக் கைது செய்துள்ளனர். புதிய தாக்குதல் ஒன்றை மேற்கொள்வது மீதான சதித்திட்டம் தொடர்பில் எட்டு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து புலன்விசாரணை நடத்தப்பட்டு முறியடிக்கப் பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் பெர்னார்ட் காசெனிவ் கூறினார்.
ஐரோப்பாவில் மிகவும் பிரபலமான கிறிஸ்மஸ் சந்தையாக கருதப்படும் பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் நகரச் சந்தை, எதிர்வரும் வெள்ளியன்று திறக்கப்படவுள்ளது. இந்தச் சந்தைக்கு சுமார் 20 லட்சம் மக்கள் வருகை புரிவர்.
ஐஎஸ் தீவிரவாதிகள், இந்தச் சந்தையைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் தீட்டியிருந்த சதித் திட்டத்தைத் தான் பிரான்ஸ் போலீசார் முறியடித்து ள்ளனர். 
இதனிடையே ஐஎஸ் தீவிரவாதிகள், அல்கெய்டா தீவிரவாதிகள் மற்றும் இவர்களுடன் இணைந்து செயல்படும் இதர சில தீவிரவாத அமைப்புக்கள் ஐரோப்பாவை மீது தாக்குதல் நடத்துவதை இலக்காக கொண்டுள்ளனர் என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்தது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-